×

டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தீ

புதுடெல்லி: திகார் சிறைக்கு செல்லும் முன்பாக, ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்நிலையில், நேற்று மாலையில் ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டரில் திடீரென தீ பற்றியது.

பின்னர், கட்சி அலுவலகத்துக்கும் அது பரவத் தொடங்கியது.இது தொடர்பாக, மாலை 4.31 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது. ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்தை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்திருந்தனர். அதில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி, ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீயை போலீசார் அணைத்தனர்.

 

The post டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தீ appeared first on Dinakaran.

Tags : Delhi Aam Aadmi Party ,New Delhi ,Tihar Jail ,Delhi ,Chief Minister ,Kejriwal ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு