×

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சென்னை: தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வைகோ, கடந்த மாதம் 25ம் தேதி திருநெல்வேலிக்கு சென்றிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்து வலது தோளில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வைகோ, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவர் குணமடைந்து வரும் நிலையி்ல் வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது வைகோவின் உடல் நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்நிலையில் அவருடைய உடல்நலனில் முன்னேற்றம் தென்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

மேலும் அவர் அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் எனவும் இதன் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு நிர்வாகிகள் யாரும் வைகோவை நேரில் சந்திக்க வர வேண்டாம் என மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ appeared first on Dinakaran.

Tags : Secretary General ,Wiko ,Chennai ,General ,Tirunelveli ,Reverend General Secretary ,
× RELATED விஷச் சாராய மரணங்களுக்கு காரணமான சமூக...