×

மணிப்பூரில் நிலநடுக்கம்

சாண்டல்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று அதிகாலை 2.38 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் தேசிய நிலநடுக்கவியல் மையம் வௌியிட்ட அறிவிப்பில் சாண்டல் பகுதியில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 77 கி.மீ ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

The post மணிப்பூரில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Earthquake in Manipur ,Chantal ,northeastern state ,Manipur ,National Seismological Center ,in Manipur ,Dinakaran ,
× RELATED கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த...