×

நெல்லை அருகே பைக்குகள் மோதி பள்ளி மாணவர் பலி: இருவர் காயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்தவர் ஆரோன் (16). இவர் திசையன்விளை தனியார் ஆங்கில பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே ஊரைச்சேர்ந்த தனது நண்பர் ஜோ என்ற சேவியர் ஜோசப் உடன் பைக்கில் பின்னால் அமர்ந்து திசையன்விளை நோக்கி சென்றுள்ளார். அப்போது இடையன்குடியை சேர்ந்த விவசாயி போதிப் (74) என்பவர் தனது பைக்கில் திசையன்விளை அருகே உள்ள தனது‌ தோட்டத்திற்கு சென்று விட்டு இடையன்குடிக்கு சென்றுள்ளார்.

அப்போது இரண்டு பைக்குகள் எதிர்பாராத விதமாக மோதியதில் ஆரோன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோ, விவசாயி போதிப் ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ஆரோன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரும் திசையன்விளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை அருகே பைக்குகள் மோதி பள்ளி மாணவர் பலி: இருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Aaron ,Uvari ,Vektionvilai Private English School ,Xavier Joseph ,Vektionvlai ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்