×

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மைய திமுக முகவர்கள் காணொளி ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி, ஜூன் 2: திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மைய திமுக முகவர்களுக்கான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம்(4ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மைய திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நேற்று நடந்தது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த காணொளி ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் அழகிரி சதாசிவம். மாவட்ட நிர்வாகி எஸ்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், செல்வசேகரன், சுகுமார், பேரூர் செயலாளர் அறிவழகன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் திமுகவின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்றனர். இந்த காணொளி அலோசனைக் கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் மக்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, திமுக அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி. என்.ஆர்.இளங்கோவன் பங்கேற்று வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கொண்டு செல்ல வேண்டியது, மின்னனு வாக்குகள் எண்ணும் போது கவனிக்கவேண்டியவை குறித்து விளக்கினர்.

The post திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மைய திமுக முகவர்கள் காணொளி ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vote Counting Center ,DMK ,Thiruvallur ,Parliamentary ,MLA ,DJ Govindarajan ,Kummidipoondi ,Tiruvallur ,Vote Counting Center for Thiruvallur Parliamentary Constituency ,
× RELATED முன்னாள் திமுக பொறுப்பு குழு...