×

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம் வேலூரில் சினிமா பார்த்து திரும்பியபோது பரிதாபம்

வேலூர், ஜூன் 2: வேலூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தார்வழி கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் ஜெயசூரியா(26). இவர் தனது நண்பர்கள் விஷால்(25), மகேஷ்(26) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காட்சி சினிமா பார்த்து விட்டு ஒரே பைக்கில் தனது ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ேநற்று அதிகாலை 1 மணியளவில் கொணவட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சென்றபோது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி, இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயசூரியா மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஷாலும், மகேஷூம் ஆபத்தான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர் படுகாயம் வேலூரில் சினிமா பார்த்து திரும்பியபோது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Padukayam Vellore ,Vellore ,Shanmugam ,Jayasuriya ,Kallangulam ,Vellore district ,Badugayam Vellore ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!