×

கரூர் எலக்ட்ரீசியன் சேலத்தில் மர்மச்சாவு

சேலம், ஜூன் 2: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகலூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(26), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 30ம்தேதி, தனது தாயிடம், வேலூருக்கு வேலைக்கு செல்வாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இந்தநிலையில், நேற்று காலை, சேலம் வந்துள்ளார். இதனிடையே, திருவாகவுண்டனூர் பைபாசில் உள்ள அம்மாசி நகர், பகுதியில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதும், உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் எலக்ட்ரீசியன் சேலத்தில் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Karur Electrician Marmachau ,Salem ,Udayakumar ,Bugalur ,Velayuthampalayam, Karur district ,Vellore ,Thiruvagoundanur Bypass ,
× RELATED பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள் 15 பேர் காயம்