×

பாஜ முன்னாள் தலைவர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், ஜூன் 2: சேலத்தை சேர்ந்த பாஜ முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமணனின் 4வது நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, செவ்வாய்பேட்டை தேர்நிலையத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில், பொதுச் செயலாளர் சசிகுமார், ஆன்மீகம் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அபிராமி முருகேசன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் பாலவிநாயகம், நிர்வாகிகள் விஜய், பழனிசாமி, வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு, லட்சுமணனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post பாஜ முன்னாள் தலைவர் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Salem ,Lakshmana ,MLA ,Sewvaipet ,hall ,Environment Protection Division ,Ex-President Commemoration Day ,
× RELATED கட்சி வளர்ந்திருப்பதாக...