×

காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல்

சேந்தமங்கலம், ஜூன் 2: எருமப்பட்டி அருகே, கோடை காலத்தில் காய்ந்த மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் துறையூர் சாலையில் இருந்து, பொன்னேரி கைகாட்டி வழியாக எருமப்பட்டி செல்லும் சாலை உள்ளது. கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இதில் தினமும் ஏராளமான பஸ், லாரி, டூவீலர்கள், கனரக வாகனங்கள் சென்று வருகிறது. கோடை காலத்தில், வெயிலின் தாக்கத்தால் இந்த சாலையில் உள்ள ஏராளமான புளிய மரங்கள் காய்ந்து விட்டது. தற்போது பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து வருவதால், காய்ந்த மரங்களில் உள்ள கிளைகள் காற்றின் வேகத்திற்கு கீழே உடைந்து விழுகிறது. எனவே, காய்ந்துள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Erumapatti ,Ponneri Kaigatti ,Namakkal Satharyur Road ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா குறித்த பேச்சுவார்த்தை தோல்வி