×

விவசாயிகள் சங்க கூட்டம்

பட்டிவீரன்பட்டி, ஜூன் 2: பெரும்பாறை அருகேயுள்ள சிறுவாட்டுகாடு, ஆசாரிபட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் யானை வழித்தடம் அமைக்க அரசு ஆய்வு பணிகளை மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி பட்டிவீரன்பட்டியில் தாண்டிக்குடி மலைத்தோட்ட விவசாயிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தீபன்கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாறை அருகேயுள்ள சிறுவாட்டுகாடு, ஆசாரிபட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் யானை வழித்தடம் அமைக்க அரசு அனுமதிக்க கூடாது. இதனால் மலைத்தோட்ட விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க அகழிகளை வெட்டி, பட்டா காடுகளுக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

The post விவசாயிகள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Union ,Pattiveeranpatti ,Thandickudi Hill Garden Farmers Association ,Siruvattukadu ,Asaripatti ,Perumparai ,
× RELATED வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்