×

போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாம்

 

திருவாரூர், ஜூன் 2: திருவாரூரில் போலீசாருக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாமை எஸ்.பி ஜெயகுமார் துவக்கி வைத்தார். திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் கும்பகோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்துகொண்டார். அவரை தொடர்ந்து கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன் உள்ளிட்ட போலீசார் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கண் பரிசோதனை மேற்கொண்டனர்.

The post போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,SP ,Jayakumar ,Kumbakonam ,Dr. Aggarwal Eye Hospital ,Tiruvarur Armed Forces Ground ,
× RELATED போதை பொருட்கள் தடுப்பு: மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி