×

சீர்காழியில் குடிபோதையில்பேருந்து ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

 

சீர்காழி, ஜூன் 2: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடமுக் கூட்டு பகுதியில் சீர்காழி போக் குவரத்து சப்-இன்ஸ் பெக்டர்கள் வேல்முரு கன், பிறைச்சந்திரன், போக் குவரத்து காவலர்கள் அண்ணாமலை , செல்வம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சீர்காழியில் இருந்து கூத்தியம்பேட்டை சென்ற மினி பேருந்தை ஓட்டிவந்த ஆர்ப்பாக்கம் பள்ளிக் கூட தெருவை சேர்ந்த சின்ன முத்து மகன் பிரசாந்த் (வயது28) என்பவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவருடைய ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

The post சீர்காழியில் குடிபோதையில்பேருந்து ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai district ,Velmuru Kan ,Phraichandran ,Annamalai ,Selvam ,Kollitamuk ,Sirkhazi ,
× RELATED சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்வி உபகரணங்கள்