×

சென்னையிலிருந்து புறப்பட்ட மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறங்கியதால் பீதி

மும்பை: சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் நேற்று காலை 172 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக விமானி, மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனால், மும்பை விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியதும், தனி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏணி படிக்கட்டு மூலமாக 172 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுவதும் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முன் கடந்த மாதம் 28ம் தேதி டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து பயணிகள் அவசரகால வழியாக விரைவாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.

The post சென்னையிலிருந்து புறப்பட்ட மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறங்கியதால் பீதி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Indigo ,Chennai ,Air Traffic Control Center ,Dinakaran ,
× RELATED நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : மும்பையில் விமானம் தரையிறக்கம்