×

மிசோரமில் ரூ.9.7 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது

அய்ஸ்வால்: மிசோரமில் ரூ.9.7 கோடி மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர். நமது அண்டை நாடான மியான்மரில் இருந்து வடகிழக்கு மாநிலமான மிசோரமுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8.43 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை கடந்த வாரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சம்பாய் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 30ம் தேதி அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மெல்புக் என்ற கிராமத்தில் ரூ.9.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது . இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மிசோரமில் ரூ.9.7 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Myanmar ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…