×

காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சென் பெயின்ட் என்ற தனியார் நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தீ விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்து அம்பத்தூர், மேனாம்பேடு சுகந்தி (55), திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் பெரிய தெரு பார்த்தசாரதி (51), அம்பத்தூர், விஜயலட்சுமிபுரம், பிரகாசம் தெரு புஷ்கர் (37) ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தை சேர்ந்த சீனிவாசன் (37) என்பவர் மீது சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

The post காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CITCO Paint Company ,Kakalore ,Chennai ,M.K.Stalin ,Chen Paint ,Citco Industrial Estate ,Ampathur ,Menampedu ,Sukanthi ,Tiruvallur Vattam ,Kadampathur Periya ,M. K. Stalin ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து