×

ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி

பணகுடி: நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம் என்ற வடிவமைப்பில் இன்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இதன் 3வது கட்டமாக 1700 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. முதற்கட்டமாக 725 விநாடிகளும், 2வது கட்டமாக 350 விநாடிகளும் சோதனை வெற்றிகரமாக நடந்தது.

The post ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : Panakudi ,ISRO Centre ,Nella District Police Mahendragiri ,Kaganyan ,Earth ,M. ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் தூய்மை...