×

விவசாயிகள் வலியுறுத்தல் க.பரமத்தியில் சுற்று பகுதியில் சாரல் மழை

 

க.பரமத்தி, ஜூன் 2: க.பரமத்தியில் சுற்று பகுதியில் சாரல் மழை பெய்தது.க.பரமத்தி பகுதியில் நேற்று மாலை சாரல் மழை பெய்து வருகிறது. வெயிலும் அடிக்காமல், பலத்த மழையும் பெய்யாமல் மாலை நேரத்தில் விட்டு விட்டு சாரல் தூறல் மட்டுமே போடுகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்களிலும் வியாபாரம் வழக்கம் போல இல்லை என்கின்றனர்.

வேலைக்கு சென்று வருவோரும் காலை மற்றும் மாலை வேளைகளில் நனைந்து கொண்டே வந்து செல்கின்றனர். எந்த வேலையும் நடைபெறாத அளவுக்கு மழை இருக்கிறது. இந்த மழையால் தொல்லை தான் அதிகம். யாருக்கும் பயனில்லை. பிழைப்பைக் கெடுக்கும் மழையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post விவசாயிகள் வலியுறுத்தல் க.பரமத்தியில் சுற்று பகுதியில் சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Paramathi district ,Paramathi ,
× RELATED க.பரமத்தி அருகே மது விற்ற முதியவர் கைது