×

வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பள்ளிகளை ஜூன் 3வது வாரம் திறக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளும் 10ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் நிலவும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10ம் தேதிக்குப் பதிலாக ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்க ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பள்ளிகளை ஜூன் 3வது வாரம் திறக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : B. S ,Chennai ,O. Paneer Selvam ,Tamil Nadu Government's Department of School Education ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பூஜா கேத்கர் விவகாரம்; யு.பி.எஸ்.சி...