×

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வைகோவை நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வைகோ, கடந்த மாதம் 25ம் தேதி திருநெல்வேலிக்கு சென்றிருந்தபோது, தடுமாறி கீழே விழுந்து வலது தோளில் காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வைகோ, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதில் அவர் குணமடைந்து வரும் நிலையி்ல் வைகோவை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது வைகோவின் உடல் நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

 

The post மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வைகோவை நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...