×

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 53 ரன்களும், துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இது பயிற்சி போட்டி என்பதால் இந்திய அணி 14 வீரர்களுடன் இந்த போட்டியில் களமிறங்கியது. ஆனால் பேட்டிங்கில் 11 வீரர்களும், ஃபீல்டிங்கில் 11 வீரர்களும் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பயிற்சி போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம் பெறவில்லை.

முதலில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். ரோஹித் ஷர்மா 23 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களிலும், ஷிவம் துபே 14 ரன்களிலும் வெளியேறினர்.

அதிரடியாக விளையாடி ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 53 ரன்களும், துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்துள்ளது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியுள்ளது.

The post டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,New York ,Bangladesh ,Rishap Bund ,Hardik ,Dinakaran ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு