×

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. உ.பி. 13, பஞ்சாப்-13, பீகார் 8, மேற்குவங்கம்-9, சண்டிகர்-1, இமாச்சல்-4, ஒடிசா-6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

மக்களவைத் தேர்தலில் 7வது மற்றும் கடைசி கட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று காலை விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும் சற்று நேரத்தில் கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளதால் எந்த கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும். நாளை அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மக்களவையின் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்ட தேர்தல் (ஏப். 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தன. ஆந்திரம், அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடைசி கட்டத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10.06 கோடி. இவர்கள் வாக்களிக்க வசதியாக, 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு உட்பட 57 தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பீகாரில் 8, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 3, சண்டீகர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் நடந்து வருவதால், அங்கும் கடைசி கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கண்ட தொகுதிகளில் ‘ஸ்டார்’ வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (வாரணாசி), ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர் (ஹமீர்பூர்), மகேந்திர நாத் பாண்டே (சந்தவுலி), பங்கஜ் சவுத்ரி (மகராஜ்கஞ்ச்), அனுப்ரியா படேல் (மிர்ஸாபூர்), ஆர்.கே.சிங் (ஆரா), முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் (பலியா), பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா (மண்டி), மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி (டயமண்ட் ஹார்பர்), பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சைனி (ஜலந்தர்), முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா (காங்ரா), ராஷ்ட்ரீய ஜனதா தளம் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி (பாடலிபுத்ரா) உள்ளிட்டோர் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல், நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடைசி கட்டத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10.06 கோடி. இவர்கள் வாக்களிக்க வசதியாக, 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு உட்பட 57 தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பீகாரில் 8, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 3, சண்டீகர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் நடந்து வருவதால், அங்கும் கடைசி கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கண்ட தொகுதிகளில் ‘ஸ்டார்’ வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (வாரணாசி), ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர் (ஹமீர்பூர்), மகேந்திர நாத் பாண்டே (சந்தவுலி), பங்கஜ் சவுத்ரி (மகராஜ்கஞ்ச்), அனுப்ரியா படேல் (மிர்ஸாபூர்), ஆர்.கே.சிங் (ஆரா), முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் (பலியா), பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா (மண்டி), மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி (டயமண்ட் ஹார்பர்), பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சைனி (ஜலந்தர்), முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா (காங்ரா), ராஷ்ட்ரீய ஜனதா தளம் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி (பாடலிபுத்ரா) உள்ளிட்டோர் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இமாச்சல் பிரதேசம் மண்டியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் வாக்களித்தார். பஞ்சாப்பில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான், கோரக்பூரில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இமாச்சலில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய், பீகாரில் லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, கொல்கத்தாவில் பாஜக மூத்த தலைவரும் நடிகருமான மிதுன் சக்ரபோர்த்தி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங், பாட்னாவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜலந்தரில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சைனி போன்ற பிரபலங்கள் வாக்களித்தனர்.

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசி கட்டத் தேர்தலுக்கு பின் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அருணாசல பிரதேசம், சிக்கிமில் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளையும் (ஜூன் 2), ஆந்திரா, ஒடிசி ஆகிய மாநிலங்களில் ஜூன் 4ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் மாலை 6 மணிக்கு கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, மாலை 6.30 மணிக்குமேல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அப்போது ஒன்றியத்தில் புதிதாக எந்த கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது ஓரளவு தெரிந்துவிடும். அதனால் தேர்தல் முடிவு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

The post மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Delhi ,Lok Sabha ,U. B. ,Punjab ,Bihar ,West Bengam ,Chandigar ,Imachal ,Odisa ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தைவிதிகள் ரத்து 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்