×

கர்நாடகாவில் நடைபெறும் சட்ட மேலவை தேர்தலில் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் காங்கிரஸ்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெறும் சட்ட மேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா சட்ட மேலவையில் 11 என்.எல்.சி.க்களின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து 11 இடங்களுக்கும் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் உள்ள காங்கிரசின் பலத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு 7 இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இந்த 7 இடங்களுக்குமான வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடனான ஆலோசனைக்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் இறுதி செய்துள்ளனர். அதில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தற்போது அமைச்சராக உள்ள என்.எஸ்.போஷாராஜு, வேணுகோபால், பி.ஆர்.ரமேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு உறுதி என கூறப்படுகிறது. முன்னாள் மேலவை உறுப்பினரான பி.ஆர்.ரமேஷ் தமிழர் ஆவர். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post கர்நாடகாவில் நடைபெறும் சட்ட மேலவை தேர்தலில் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka ,Bangalore ,Congress party ,LAW MAELAWA ,11 ,N. L. C. ,
× RELATED பெங்களூருவில் கர்நாடக மாநில...