×

செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்

ஆத்தூர், ஜூன் 1: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் உத்தரவின் பேரில், நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கண்ணன், ராஜா, சிங்காரவேலு, ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில், புதுப்பேட்டை கோட்டை இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழ குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்த ₹1 லட்சம் மதிப்புள்ள மாம்பழம், முலாம்பழங்களை பறிமுதல் செய்து அளித்தனர். மேலும், இந்த பழங்களை வைத்திருந்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, இனி இது போன்ற தவறுகளை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினர். அதிகாரிகள் ஆய்வின் போது, செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தால், அதனை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகள் மீது, குற்றவியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Athur ,Dr. ,Kathiravan ,Salem District Food Safety Department ,Kannan ,Raja ,Singaravelu ,Ramesh ,Athur Bus Stand ,
× RELATED ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம்