×

ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு

சேலம், ஜூன் 1:சேலம் மல்லமூப்பம்பட்டி ராமகவுண்டனூர் காட்டுவளவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(38). இவர் நேற்று கருப்பூர் இஸ்கான் கோயில் அருகில் உள்ள ஏரியில், மீன் பிடித்து கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த சகதியில் சிக்கிக்கொண்டார். அவரால், வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கினார். இதனை பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று, மோகன்ராஜை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து கருப்பூர் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், விரைந்து சென்ற போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mohanraj ,Mallamoopampatti ,Ramakoundanur Kattuvala ,Karupur ISKCON temple ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு