×

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணைய தளம் 13.12.2021 அன்று திறக்கப்படவுள்ளது.  மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  அதே போல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித் தொகை திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்படவுள்ளதால் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் இன மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 13.1.2022க்குள் கல்வி இணையதள வழி (escholarship.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Post Matric ,Adi Dravidar Welfare Department ,Chennai ,Manivasan ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...