×

தென்னந்தோப்பில் பதுக்கிய ரூ.4.80 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

மதுரை, ஜூன் 1: மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பாபு நகர் தென்னந்தோப்பில் தடை செய்யப்பட்ட சிகரெட் பண்டல்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தெப்பக்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தென்னந்தோப்புக்கு அதிரடியாக சென்றனர். போலீஸ் வருவதை கண்டதும் அங்கிருந்த ஆசாமிகள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அங்கு பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.4.80 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவற்றை பதுக்கி வைத்த ஆசாமிகள் யார், தென்னந்தோப்பின் உரிமையாளர் யார், அவருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தென்னந்தோப்பில் பதுக்கிய ரூ.4.80 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Theppakulam ,Babu Nagar Coconut Grove ,Airavathanallur ,Dinakaran ,
× RELATED துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி...