×

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 1: பாலஸ்தீன மக்களை பாதுகாக்க கோரி மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்டத்தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் முன்னிலை வகித்தார். பாலஸ்தீன மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசு இனவெறி இஸ்ரேலுடனான உறவே முறிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸ்மில்லாஹ் கான், வடக்கு மாவட்டத் தலைவர் பிலால்தீன், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STPI Party Demonstration in Support of Palestine ,Madurai ,STPI party ,STBI party ,Annachilai ,Nelpet, Madurai ,South ,District ,President ,Seeman Sikandar ,South District… ,STBI ,Party Demonstration in Support of Palestine ,Dinakaran ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்