×

கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு டிஜிபி ரொக்க பரிசு வழங்கி பாராட்டு

சென்னை: உலக அளவில் கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக காவல்துறையினருக்கு டிஜிபிசங்கர் ஜிவால் நேரில் அழைத்து ரொக்க பரிசு வழங்கிபாராட்டு தெரிவித்தார். உலக அளவில் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் நடந்த ஹன்ட்பால் போட்டியில் இந்திய அணிக்காக தமிழக காவல்துறை ஹன்ட்பால் அணியில் இருந்து தேர்வாகிய தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13 அணி தலைமை காவலர் எஸ். கண்ணன் மற்றும் சென்னை அண்ணா நகர் சட்டம் ஒழுங்கு காவலர் கபில் கண்ணன் ஆகியோர் கடந்த வாரம் இந்திய அணிக்காக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்று வந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் இவர்களை நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழும் ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினார். அப்போது, உடன் ஏடிஜிபி ஜெயராமன், ஐஜி சந்தோஷ் குமார் மற்றும் பல காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காவலர்களுக்கு டிஜிபி ரொக்க பரிசு வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,Shankar Jiwal ,Tamil Nadu police ,team ,Uzbekistan ,
× RELATED சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...