×

10 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர், பெண் உதவியாளர் அதிரடி கைது

சென்னை:  திருவேற்காட்டை சேர்ந்தவர் அதே பகுதியில் உள்ள தனது காலியிடத்துக்கு வரி சான்றுக்காக திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதற்கு10 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கேட்டுள்ளார். இதையடுத்து மனுதாரர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை பிரிவு 2 அலுவலகத்தில் புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். பணத்துடன் அலுவலகத்திற்கு வந்த அந்த நபர்,  வருவாய் ஆய்வாளர் உதவியாளராக பணிபுரியும் தேன்மொழியிடம் 10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து லஞ்ச பணமாக வாங்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்….

The post 10 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர், பெண் உதவியாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvedu ,Office ,
× RELATED டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர்...