×

சாத்தூர் அருகே பஸ் மோதி வியாபாரி பலி

சாத்தூர்: சாத்தூர் அருகே டூவீலர் மீது தனியார் பஸ் மோதியதில் ஆட்டு வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. ஆட்டு வியாபாரியான இவர், இன்று காலை 9 மணயளவில் சிவகாசி-சாத்தூர் சாலையில் மேட்டமலை அருகே சாத்தூரை நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகாசியில் இருந்து கோவில்பட்டி சென்ற தனியார் பஸ் மோதியது. கீழே விழுந்த கருப்பசாமி மீது சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் போலீசார் கருப்பசாமி உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே பஸ் மோதி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Chathur ,Chaturthi ,Duwheeler ,Chaturr ,Karupasamy ,Salvarpatty ,Virudhunagar district ,Matamali ,Sivakashi-Chathur road ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே மிரட்டும் மேல்நிலை...