×

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயம் என்ற உத்தரவை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயம் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இ-ஃபைலிங் முறையை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஒத்திவைத்தார். ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். முந்தைய தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலாவுக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். வழக்கறிஞர் சங்க கோரிக்கையை அடுத்து தற்காலிகமாக ஜூன் 2 வரை இ-ஃபைலிங் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

The post தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயம் என்ற உத்தரவை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai iCourt ,Tamil Nadu ,Chennai ,iCourt ,Chief Justice ,R. Mahadevan ,Tamil ,Nadu ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை