×

புதுவை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 4800 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று இரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற ஒரு மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியில் 4800 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து மது பாட்டில் கடத்திய நான்கு பேரை பிடித்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த மது பாட்டில்கள் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் உள்ள போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள உளவாய்க்கால் பகுதிக்கு சென்றனர். பிறகு அங்குள்ள புதிய மனை பிரிவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியின் மத்தியில் நின்றிருந்த மினி லோடு கேரியர் வண்டியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த வண்டியை திறந்து பார்த்தபோது அதில் சாராய கேன்கள், பாட்டில்கள், மூடிகள், போலி ஹாலோகிராம், போலி மதுபான ஸ்டிக்கர் மற்றும் மதுபான பாட்டில் தயார் செய்து சீலிங் செய்யும் இயந்திரம் போன்ற போலி மதுபாட்டில் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு மூடி போட்ட லாரியும் பறிமுதல் செய்தனர்.

The post புதுவை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 4800 மதுபாட்டில்களுடன் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puduwa ,Ulundurpettai ,Special Intelligence Unit ,Tolgate ,Kallakurichi district ,Puducherry ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு