×

ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொடுமையால் ரூர்கேலாவில் 10 பேர் பலி


ரூர்கேலா: ஒடிசாவில் அதிகபட்சமாக 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், ரூர்கேலாவில் 10 பேர் வெப்பத்தால் பலியாகினர். ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் வெயில் வாட்டி வதைத்ததால் நேற்று 10 பேர் வெப்பத் தாக்குதலால் இறந்ததாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து ரூர்கேலா அரசு மருத்துவமனையின் பொறுப்பாளர் சுதாராணி பிரதான் கூறுகையில், ‘ஒடிசாவில் வெப்பக் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடுமையான வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று மட்டும் பிற்பகல் 2 மணி முதல் ஆறு மணி நேரத்திற்குள் 10 பேர் வெப்ப தாக்குதலில் இறந்தனர்.

மருத்துவமனைக்கு வருவதற்குள் எட்டு பேர் இறந்துவிட்டனர்; மீதமுள்ளவர்கள் சிகிச்சையின் போது இறந்தனர். இறந்தவர்களின் உடல் வெப்பநிலை சுமார் 103 முதல் 104 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. அவர்கள் இறந்துவிட்டதால் இறந்ததற்கான காரணத்தை முழுமையாக அறியமுடியவில்லை. இருந்தாலும் அதிகபட்ச வெப்பத்தால் அவர்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே, உண்மையான காரணம் தெரியவரும். நேற்று மட்டும் ஒடிசாவில் 12 இடங்களில் 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பக் காற்று வீசியது. அதிகபட்சமாக ஜார்சுகுடாவில் 47 டிகிரி செல்சியஸ் (117 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி உள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை’ என்றார்.

 

The post ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொடுமையால் ரூர்கேலாவில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Rourkela ,Odisha ,Rourkela, Odisha ,Dinakaran ,
× RELATED ஒடிசா காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ராஜினாமா