×

நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு பேருந்துகளுக்கு முறையாக அனுமதி இல்லை: போக்குவரத்து அலுவலர் விளக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு பேருந்துகளுக்கு முறையாக அனுமதி இல்லை போக்குவரத்து அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். தகுதியில்லாத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தகுதியில்லா பேருந்துகளை செப்டம்பர் 30 வரை இயக்க அரசு கால நீட்டிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 34 பேருந்துகள் புறநகர் பேருந்துகளாகவும், 30 பேருந்துகள் கிராமப்புற பேருந்துகளாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில் கிராமப்புற பேருந்துகள் பெரிதும் தகுதியில்லா பேருந்துகளாக தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வழியாக வரும் 8-ம் நம்பர் பேருந்துக்கு தகுதிச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் திருச்செங்கோட்டில் புறநகர் பேருந்துகளாக இயங்கி வரக்கூடிய 34 பேருந்துகளில் 12 பேருந்துகளுக்கு முறையாக அனுமதி இல்லை என தெரியவந்துள்ளது. தகுதியில்லாத பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

The post நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு பேருந்துகளுக்கு முறையாக அனுமதி இல்லை: போக்குவரத்து அலுவலர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...