×

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். விவேகானந்தர் மண்டபத்தை மோடி சுற்றிப்பார்க்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இன்று காலை வழக்கம் போல் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பகல் 11.40 மணிக்கு படகு போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. அதன் பிறகு யாரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே இன்று காலை படகில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மட்டும் உடனடியாக விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகில் அழைத்து வரப்பட்டனர். பெரும் குழப்பத்தில் சுற்றுலா பயணிகள் இருந்து வந்த நிலையில் தற்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

The post கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vivekananda Mandapam ,Kanyakumari ,Modi ,Dhyana Mandapam ,Kanyakumari Vivekananda Memorial Hall ,
× RELATED குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!!