×

பீகாரில் உயிரிழப்புகள் அதிகம்: இந்தியாவில் கடும் வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக உயர்வு

டெல்லி: பீகார், ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் 113 டிகிரி முதல் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் பீகார், ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. டெல்லி முங்கேஷ்பூரில் 126 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் 40 வயது நபர் வெப்ப தாக்குதலால் உயிரிழந்தார். உடல் வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரித்து உடல் உறுப்புகள் செயலிழந்து இறந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் கடும் வெயிலை தாங்க முடியாமல் உயிரிழந்த 40 வயது நபர் பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்தவர். வட மாநிலங்களில் கடும் வெயில் மற்றும் வெப்பத் தாக்குதலால் பலியான 42 பேரில் 20 பேர் பீகாரில் உயிரிழந்துள்ளனர். பீகாரின் அவுரங்காபாத்தில் 12 பேரும் ஆராவில் 6 பேரும் பக்சரில் 2 பேரும் வெப்பத் தாக்குதலால் பலியாகி உள்ளனர். இதனிடையே ராஜஸ்தான், அரியானா, சண்டீகர், டெல்லி, உ.பி., ம.பி.யில் வெயில் 118 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post பீகாரில் உயிரிழப்புகள் அதிகம்: இந்தியாவில் கடும் வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bihar ,India ,Delhi ,Rajasthan ,
× RELATED நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக்: பீகார் போலீஸ் பரபரப்பு தகவல்!