×

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம்

சென்னை: என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2003ல் சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர், வெள்ளத்துரை. மருதுபாண்டியர் குருபூஜையின்போது 2013-ம் ஆண்டு எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளதுரை என்கவுன்டர் செய்தார். புதுக்குளம் பாரதி, பிரபு ஆகியோர் வெள்ளதுரையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வெள்ளதுரை மீதான என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்தது. திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி பிரிவில் வெள்ளதுரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Encounter ,A. D. S. B. ,Badadurai ,Chennai ,Ayothikupam Weeramani ,Chennai, Vellathurai ,Maruthupandiar Kurupuja ,S. I. Alvin Sudhan ,Alvin Sudhan ,
× RELATED என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட...