×

அனைத்து கோயில்களின் பூசாரிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

 

திருப்பூர், மே 31: திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அத்திக்கடவு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், கிராம பூசாரிகள் பேரவை மாநில தலைவர் ராஜ தேவேந்திர சுவாமிகள், மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம், மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருப்பூர் அங்கேரிபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை இடிக்க கூடாது. கோவில் திருவிழா காலங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் பூசாரிகளுக்கும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அனைத்து கோயில்களின் பூசாரிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Vishva Hindu Parishad Village Temple Priests Assembly ,Perumanallur ,Athikadavu ,Protest Committee ,Coordinator ,Subramaniam ,Village Priests Assembly ,
× RELATED புதிய பேருந்து நிலையம் அருகே நடு...