×

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு

 

திருவள்ளூர், மே 31: முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டினை பயன்படுத்திக் கொள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாக முன்னாள் படைவீரரை சார்ந்தோர் சான்று பெற்று கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி பல்வேறு கல்விகளுக்கு விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி சார்ந்தோர் சான்று பெற்று பயனடையுமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

The post முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Collector ,Prabhu Shankar ,Tiruvallur ,District ,Tamilnadu ,
× RELATED உலக குருதி கொடையாளர் தினம் அனுசரிப்பு: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு