×

சித்தப்பாவை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் அதிரடி கைது

 

சேலம், மே 31: சேலம் அம்மாபேட்டை எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் பெரியசாமி (40). இவரது வீட்டின் அருகில், அண்ணன் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகனான சீனிவாசன் (20), நேற்று முன்தினம் மதியம் தாத்தா ரங்கசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சித்தப்பாவான பெரியசாமி, தட்டிக்கேட்டு சீனிவாசனை கண்டித்துள்ளார். அந்தநேரத்தில் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சித்தப்பா பெரியசாமியின் மார்பு, கை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சீனிவாசன் சரமாரியாக குத்தினார்.

இதில், பலத்த காயமடைந்த பெரியசாமி, கீழே விழுந்தார். உடனே பெரியசாமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த அம்மாபேட்டை எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சீனிவாசன் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post சித்தப்பாவை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Siddhappa ,Salem ,Rangaswamy ,Periyaswamy ,Salem Ammapet SMC Colony ,Annan Murugesan ,Srinivasan ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்