×

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது

 

வேலாயுதம்பாளையம், மே31: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் தோட்டக்காடு இடத்தெரு பகுதியைச் சேர்ந்த ரவி (56) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Maravapalayam Tasmac ,Noyal ,Karur district ,Dinakaran ,
× RELATED நொய்யலில் நீர்வரத்து: குளம், ஏரிகள் நிரம்புகிறது