×

உயிரியல் பூங்காவில் கடமான் முட்டி ஊழியர் பலி

சேலம்: சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், தற்காலிக விலங்கு பாதுகாவலர்களாக நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25), குரும்பப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோர் பணியாற்றினர். இருவரும் நேற்று மதியம், கடமான்களுக்கு உணவளிக்க கோதுமை தவிடு எடுத்து சென்றனர். அங்கு உணவு தொட்டியில் கோதுமை தவிடை தமிழ்ச்செல்வன் கொட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கடமான், ஆக்ரோஷமாக ஓடிவந்து முட்டித் தள்ளியதில் தமிழ்ச்செல்வன் இறந்தார்.

The post உயிரியல் பூங்காவில் கடமான் முட்டி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamizselwan ,Namakkal district ,Murukesan ,Kurumbati ,Kurumbatti Forest Zoo ,Salem Yardadu Mountain ,Kadaman Mutti ,Dinakaran ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்