×

ஊட்டி மலை ரயில் மோதி ஒருவர் சாவு

ஊட்டி: ஊட்டி ரயில் நிலையத்திலிருந்து மலை ரயில் மேட்டுப்பாளையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டது. 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மரபியல் பூங்கா அருகே ரயில் சென்றபோது திடீரென தண்டவாளத்தை கடந்த ஒருவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து ஊட்டி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தின் காரணமாக ஊட்டி மலை ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றது.

The post ஊட்டி மலை ரயில் மோதி ஒருவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Ooty mountain train ,Ooty ,Ooty train station ,Matuppalayam ,
× RELATED மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!