×

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலுக்கு பின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மிகப்பெரிய முடிவை எடுப்பார். அவர் பிரசாரத்துக்கு வெளியே செல்லவில்லை. அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்குவது ஆளுநர் என்பதையும் அறிந்தேன்.

ஜூன் 4ம் தேதிக்கு பின் பீகாரில் ஏதோ மிகப்பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்ற எனது அச்சத்தை இவை உறுதிபடுத்துகின்றன. மகாபந்தன் கூட்டணியில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் விலகியதில் இருந்து ஐக்கிய ஜனதா தள தலைவரை விமர்சிக்கவில்லை. மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டணியான பாஜவுடன் செல்ல மாட்டார்” என்றார்.

The post மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து appeared first on Dinakaran.

Tags : CM ,Nitish Kumar ,BJP ,Lok Sabha ,Tejaswi Yadav ,Rashtriya Janata Dal ,chief minister ,Patna, Bihar ,Bihar ,Lok Sabha elections ,
× RELATED பாதுகாப்பு படைகளில் ஆள் சேர்க்கும்...