×

என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், சதாசிவ நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய டி.கே.சிவகுமார், என்னையும் முதல்வர் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில், பகைவர்களை கொல்வதற்காக செய்யப்படும் சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டுவருகிறது. யாகத்தில் ஆடு, பன்றி, செம்மறி ஆடு ஆகிய விலங்குகள் பலியிடப்படுகிறது. இதை செய்வது யார் என்று எனக்கு தெரியும்.

கேரளாவில் நடந்துவரும் இந்த யாகத்தில் 21 ஆடுகள், 3 எருமைகள், 21 ஆடுகள் பலியிடப்படுகின்றன. அகோரிகள் மூலம் இந்த யாகம் நடத்தப்படுகிறது. யார் இதை செய்வது என்று எனக்கு தெரியும். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், நம் நம்பிக்கையின் வலிமை நம்மை தாங்கும். நான் தினமும் வீட்டை விட்டு வெளியேறும்போது ஒரு நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் வெளியே செல்கிறேன் என்பதால் எனக்கு எதுவும் ஆகாது என்றார்.

The post என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,DK Sivakumar ,BENGALURU ,DK Shivakumar ,Sadasiva Nagar ,Chief Minister ,Siddaramaiah ,Chatru ,Bhairavi ,Yag ,Kerala ,Yaga ,Yagya ,TK Shivakumar ,
× RELATED மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற...