×

60,286 மாணவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி

 

தர்மபுரி, மே 31: நான் முதல்வன் என்கிற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் 60,286 மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் விதமாக, பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவிக்கும் வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம், 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் 60,286 கல்லூரி மாணவர்களுக்கு, பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தினால் பயனடைந்த கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ‘உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள், இன்றைய தொழில் துறைக்கு தேவையான நவீன திறன்களை கற்று, தங்களுக்கு விருப்பமான துறைகளில் வெற்றி பெற ஏதுவாக, தமிழக முதல்வர் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டோம். தற்போது, கல்லூரியில் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். உயர்கல்வி படிப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,’ என்றனர்.

 

The post 60,286 மாணவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Naan Mutluvan ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு