×

பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

புதுடெல்லி: பஞ்சாப்பின் ரூப் நகரை சேர்ந்த நசீப் சந்த் என்பவர் சட்டவிரோதமாக குவாரி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் முறைகேடாக பண பரிவர்த்தனைகளை செய்துள்ளது தெரியவந்தது. நசீப் சந்த் மீது பஞ்சாப் போலீஸ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின.

இந்நிலையில் நசீப் சந்தின் வீடு மற்றும் பஞ்சாப், இமாச்சல பிரதேசத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் உள்ள 14 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.4 கோடி பணம், செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

The post பஞ்சாபில் சட்ட விரோத சுரங்க நிறுவனத்தில் ரூ.4 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Punjab ,New Delhi ,Naseeb Chand ,Rup Nagar, Punjab ,Punjab Police Enforcement Department ,Dinakaran ,
× RELATED டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு