×

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை

ராம்பூர்: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான முகமது அசம் கான் பல்வேறு வழக்குகளில் சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்ரார் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது குறித்தும், வீட்டை காலி செய்ய மிரட்டியது குறித்தும் பாதிக்கப்பட்ட அப்ரார், அசம் கான் உட்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ராம்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.14லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பர்கத் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

The post சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம் கானுக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Samajwadi Party ,Azam Khan ,Rampur ,Uttar Pradesh ,Mohammad Azam Khan ,Sitapur Jail ,Abrar ,Dinakaran ,
× RELATED தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை...