×

தங்கம் கடத்திய வழக்கில் காங். எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஒரு பயணி வந்திறங்கினார். அவரை வரவேற்பதற்காக சிவகுமார் பிரசாத்(72) என்பவர் அங்கு வந்திருந்தார். துபாயில் இருந்து வந்த பயணி சிவகுமார் பிரசாத்திடம் ரூ.35.22 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை தர முயன்றுள்ளார்.

அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். சிவகுமார் பிரசாத் தன்னை சசி தரூரின் உதவியாளர் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக சசி தரூர் தன் டிவிட்டர் பதிவில், “என் தனிப்பட்ட உதவியாளராக முன்பு பணியாற்றி வந்த சிவகுமார் பிரசாத் மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

The post தங்கம் கடத்திய வழக்கில் காங். எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Kong ,M. B. Sasi Tharoor ,New Delhi ,Delhi International Airport ,Dubai ,Shivakumar Prasad ,Sivakumar Prasad ,
× RELATED சிமெண்ட் துறையில் ஆதிக்கம்: அதானி குறித்து காங். எச்சரிக்கை