×

அரசு மருத்துவமனையில் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமி பலாத்காரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராமத்தை சேர்ந்த பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3வது மாடியில் உள்நோயாளியாக இருந்த அவருக்கு உதவியாக அரசு பள்ளியில் 7ம்வகுப்பு படிக்கும் 13 வயது மகள் தங்கியிருந்தார். சிகிச்சைக்கு பின் சிறுமியின் தாய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுக்கு சென்ற நிலையில் சிறுமி அடிக்கடி செல்போனில் ஒருவருடன் பேசுவதை பார்த்த சிறுமியின் அக்கா சந்தேகமடைந்து கேட்டபோது தாயுடன் மருத்துவமனையில் இருந்து போது, அதே மருத்துவமனையில் பக்கத்து படுக்கை நோயாளிக்கு உதவியாக, கிருஷ்ணகிரி ரயில்வே காலனியை சேர்ந்த மனோஜ் (19) என்பவர் இருந்தார்.

கேன்டீனில் உணவு வாங்க செல்லும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 25ம்தேதி காதலிப்பதாக கூறிய மனோஜ், இரவில் மருத்துவமனையின் ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் அக்கா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மனோஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post அரசு மருத்துவமனையில் தாய்க்கு உதவியாக இருந்த சிறுமி பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Veppanahalli ,Krishnagiri Government Medical College Hospital ,
× RELATED மாயமான முதியவர் சடலமாக மீட்பு